SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இளநீர் பாயசம்

2020-09-08@ 17:23:18

தேவையான பொருட்கள்

இளநீர் - 2,
சர்க்கரை - 150 கிராம்,
மில்க் மெய்டு - 1/2 டின்,
பால் - 1/2 லிட்டர்,
முந்திரி - 50 கிராம்,
நெய் - 10 கிராம்,
ஏலக்காய் - 5 கிராம்,
உலர் திராட்சை - 50 கிராம்.


செய்முறை

இளநீரை தண்ணீர் மற்றும் வழுக்கையை தனியாக எடுத்து வைக்கவும். இளநீர் வழுக்கையை பொடியாக நறுக்கவும். பாலை நன்கு காய்ச்சி குளிர வைக்கவும். பால் நன்கு ஆறியதும் அதில் நறுக்கிய இளநீரை சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் மில்க்மெய்ட் மற்றும் சர்க்கரை, ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கலக்கவும். இளநீர் தண்ணீரை மிதமாக சூடு செய்து அதனை பால் கலவையில் சேர்த்து கலந்து வைக்கவும். பிறகு நெய்யில் முந்திரி, உலர்ந்த திராட்சையை வறுத்து நன்கு ஆறியதும் இளநீர் கலவையில் சேர்க்க வேண்டும். இதனை அப்படியே அல்லது ஃபிரிட்ஜில் வைத்து குளிர்ந்த பிறகும் சாப்பிடலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nailssss_SSS

    உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

  • gujrat-acc20

    குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

  • odisaa_satueesss

    ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

  • 20-01-2021

    20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • asusiiiee_dravviii1

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்