தஞ்சை இறால் பிரியாணி
2020-06-09@ 12:42:04

தேவையான பொருட்கள்
இறால் - 300 கிராம்,
சீரக சம்பா அரிசி - 250 கிராம்,
பட்டை - 2 துண்டு,
லவங்கம் - 4, ஏலக்காய் - 4 ,
இஞ்சி, பூண்டு விழுது - 75 கிராம்,
வெங்காயம் நறுக்கியது - 100 கிராம்,
தக்காளி நறுக்கியது - 150 கிராம்,
மிளகாய்த்தூள் - 5 கிராம்,
மஞ்சள் தூள் - 2 கிராம்,
எண்ணெய் - 75 மி.லி.கிராம்,
தயிர் - 50 மிலி,
மல்லி - 1 கொத்து,
புதினா - 1 கொத்து,
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்.
செய்முறை
பாத்திரத்தில் எண்ணை சேர்த்து பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவேண்டும். தொக்கு போல் வந்ததும், அதில் இறாலை சேர்த்து வதக்கவும். அரிசியை நன்கு கழுவி 20 நிமிடம் ஊறவைத்து மசாலா கலவையுடன் சேர்க்க வேண்டும். ஒரு கிளாஸ் அரிசிக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, உடன் சிறிது தயிர், புதினா இலை மற்றும் மல்லி இலையை சேர்த்து குக்கரில் சிம்மில் வைத்து பத்து நிமிடத்தில் இறக்கவும். பிரியாணி உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.
Tags:
தஞ்சை இறால் பிரியாணிமேலும் செய்திகள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!