SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கதம்ப சாதம்

2020-03-11@ 15:20:15

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1½ கப்,
துவரம் பருப்பு - 1/2 கப்,
புளிக்கரைசல் - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்.
பறங்கிக்காய் அரிந்த துண்டுகள் -  1/4 கப்,
சுரைக்காய் அரிந்தது - 1/4 கப்,
கொத்தவரங்காய் - 3,
சர்க்கரை வள்ளிக்கிழங்கு அரிந்தது - 1/4 கப்,
வாழைக்காய் அரிந்தது - 1/4 கப்,
வேர்க்கடலை, மொச்சை, கொண்டைக்கடலை எல்லாமாகச் சேர்ந்தது - 1/4 கப்,
கத்தரிக்காய் - 1, தக்காளி - 1, (நாட்டுக்காய்கறிகள் மட்டும் தேவையானவை)
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
வரமிளகாய் - 1,
கறிவேப்பிலை - 6 இதழ்கள்,
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,  
உடைத்த முந்திரித்துண்டுகள் - 2 டேபிள் ஸ்பூன்.
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்,
தனியா - 2 டேபிள் ஸ்பூன்,
வரமிளகாய் - 3,
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 6 டேபிள் ஸ்பூன்.


செய்முறை

கடலைகளை 3 மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்தவற்றை வறுத்து கொரகொரப்பாகப் பொடிக்கவும். பச்சரிசி, துவரம்பருப்பு இரண்டையும் சேர்த்து குழைய வேக விடவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் புளிக்கரைசலை ஊற்றி மேலும் 1 கப் நீர் ஊற்றி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் ஊறிய கடலைகளைச் சேர்த்து வேக விடவும். அரிந்த காய்களையும் சேர்த்து வேக விடவும். காய்கள் வெந்து குழம்புடன் சேர்ந்ததும் பொடித்து வைத்துள்ள பொடியினைத்தூவி இறக்கவும். வெந்து மசித்த சாதத்தினை அதில் சேர்த்து கலக்கவும். தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து அதில் சேர்க்கவும். பகவானுக்குப் படைப்பதற்கு ஏற்ற கதம்ப சாதம் தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

  • ast23

    ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

  • chinacrob23

    சீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்!: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது யுக்தி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்