புதினா சிக்கன் கிரேவி
2020-03-09@ 12:55:48

தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/4 கிலோ
பல்லாரி - 2
தக்காளி - 2
புதினா - 1 கட்டு
பச்சை மிளகாய் - 3
மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையானஅளவு
செய்முறை
சிக்கனை நன்றாக கழுவி தனியாக வைக்கவும். புதினாவை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். தக்காளி, பல்லாரியை பொடியாக நறுக்கவும். குக்கரில் எண்ணெய் காய்ந்ததும் பல்லாரி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். இத்துடன் இஞ்சி, பூண்டு விழுதை போட்டு வதக்கவும். பிறகு சிக்கனை போட்டு வதக்கவும். இத்துடன் தக்காளி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு போட்டு வதக்கவும். கடைசியாக தேவையான அளவு நீர் விட்டு அரைத்த புதினாவையும் சேர்த்து, குக்கரை மூடி 15 நிமிடம் வேக விடவும். வெந்ததும் குக்கரைத் திறந்து கிரேவி கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கவும். தோசை, சப்பாத்திக்கேற்ற கோழி புதினா கிரேவி ரெடி.
Tags:
புதினா சிக்கன் கிரேவிமேலும் செய்திகள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்