ஆளி விதை மிக்ஸ்டு நட்ஸ் மில்க்
2020-03-05@ 16:21:17

தேவையான பொருட்கள்
பாதாம் பருப்பு : 5 - 7
வால்நட் பருப்பு : 3
ஆளி விதை : 2 மேஜை கரண்டி
குளிர்ந்த பால் : 400 மி.லி.
ஸ்ட்ராபெர்ரி : 5 - 6
தேன் : 1 மேஜைக்கரண்டி
ஏலக்காய் : 3.
செய்முறை
பாதாம் பருப்பை இரவே ஊறவைத்து தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வால்நட், ஸ்ட்ராபெர்ரியையும் நறுக்கி தனியே வைக்கவும். ஆளி விதையை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பாதாம் பருப்பு, வால்நட், ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஆளி விதை அனைத்தையும் ஏலக்காய், தேன், பால் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.
குறிப்பு: ஒமேகா 3, நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்த ஆளி விதை உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
மேலும் செய்திகள்
பெங்களூர் தக்காளி மின்ட்
Thulasi Tea
லிச்சி லெமனேட்
பீட்ரூட் மில்க் ஷேக்
தேங்காய்ப்பால் பலூடா
வெற்றிலை குல்கந்து ஜூஸ்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்