காரைக்குடி மீன் குழம்பு
2020-02-05@ 14:37:24

தேவையான பொருட்கள்:
மீன் - 1/2 கிலோ,
புளி - தேவைக்கு,
வெங்காயம் - 3,
தக்காளி - 2,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
மல்லித்தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
தேங்காய் - துருவியது,
மிளகு - 1/2 டீஸ்பூன்,
சீரகம் 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - தேவையான அளவு,
வெந்தயம் - 1 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 4 குழி கரண்டி.
செய்முறை:
முதலில் புளியை 1½ கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். தேங்காய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். தக்காளியை நடுத்தர துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். மீனை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் பூண்டு, வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும். பின் புளித்தண்ணீர், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து குழம்பு திக்காகும் வரை கொதிக்க விடவும். வெட்டி வைத்துள்ள மீன் துண்டுகளைச் சேர்த்து 10 நிமிடங்கள் வேக விட்டு இறக்கவும்.
Tags:
காரைக்குடி மீன் குழம்புமேலும் செய்திகள்
மீன் சாப்ஸ்
வாழை இலை ஃபிஷ் ஃப்ரை
கேரளா நெத்திலி குழம்பு
விறால் மீன் குழம்பு
பரலா ஜெர்க் ஃபிஷ்
காரைக்குடி மீன் மசாலா
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!