SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேரீட்சை நட் கேக்

2020-02-05@ 14:36:14

தேவையான பொருட்கள்:

கொட்டை நீக்கிய பேரீட்சை - 450 கிராம்,
பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்,
வெண்ணெய் - 170 கிராம்,
பொடித்த சர்க்கரை - 225 கிராம்,
வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்,
முட்டை - 4,
மைதா - 225 கிராம்,
பேக்கிங் பவுடர் - 1½ டீஸ்பூன்,
கொக்கோ பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் - 120 கிராம்.


செய்முறை:

ஒரு கப் சுடு தண்ணீரில் பேரீட்சையை பேக்கிங் சோடா சேர்த்து ஒரு இரவு ஊற விடவும். சர்க்கரையையும், வெண்ணெயையும் நுரைக்க அடிக்கவும். அதனுடன் முட்டையை ஒவ்வொன்றாக சேர்த்து அடிக்கவும். எசென்சும் சேர்க்கவும். பேரீட்சையுடன் கொக்கோ பவுடர், முந்திரி, பாதாம் சேர்த்து கலந்து சலித்த மைதா, பேக்கிங் பவுடர் கலவையை சேர்த்து 6 இன்ச் வட்ட அலுமினிய பாத்திரத்தில் வெண்ணெய் தடவி கேக் கலவையை போட்டு 1800C சூட்டில் 40 நிமிடங்கள் பேக் செய்யவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 30-09-2020

    30-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • formars29

    வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்!: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..!!

  • coronadeath29

    கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்!: கொடிய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..!!

  • thee29

    பற்றி எரியும் காட்டுத்தீயால் கண்ணீரில் தத்தளிக்கும் கலிபோர்னியா மாகாணம்!: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..!!

  • vadothara29

    குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி!: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்