SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆப்பிள் டார்ட்

2020-01-29@ 13:51:36

பேஸ்ட்ரி செய்ய தேவையான பொருட்கள்:

மைதா - 225 கிராம்,
வெண்ணெய் (உப்பு இல்லாதது) - 50 கிராம்,
 உப்பு - 1/4 டீஸ்பூன்,
தண்ணீர் - தேவைக்கேற்ப.

பில்லிங்  செய்ய தேவையான பொருட்கள்:

நாட்டு சர்க்கரை - 200 கிராம்,
ரொட்டி தூள் - 50 கிராம்,
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்,
எலுமிச்சை மேல் தோல் துருவியது - 1 டீஸ்பூன்,
ஆப்பிள் - 4 (நீளவாக்கில் சன்னமாக வெட்டி வைத்துக்கொள்ளவும்)


பேஸ்ட்ரி செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். பின் சிறிது தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அதை காற்று புகாமல் மூடி குளிர்சாதனப் பெட்டியில் 20 நிமிடம் வைக்கவும்.

பில்லிங் செய்முறை:

மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் கலந்து வைத்துக்கொள்ளவும்.ஆப்பிள் டார்ட் செய்முறை: குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுத்த மாவை இரண்டாக பிரித்து சப்பாத்திபோல் தேய்த்து டார்ட் செய்யும் டிரேவின் மேல் போட்டு ஓரங்களில் அதிகம் உள்ள மாவை வெட்டி எடுத்துவிட்டு அதன்மேல் ஆப்பிள் கலவையை நிரப்பவும். பின் அதன்மேல் மீதி உள்ள மாவை சப்பாத்திபோல் தேய்த்து அதை நீள, நீளமாக வெட்டி ஆப்பிள் கலவை மேல் அலங்கரித்து பிரீ-ஹீட் செய்யப்பட்ட ovenல் 150 டிகிரியில் 15-20 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறவும். இது செய்வது மிகவும் சுலபம். மிகவும் ருசியாக இருக்கும். ஆரோக்கியமானதும்கூட.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • formars29

    வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்!: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..!!

  • coronadeath29

    கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்!: கொடிய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..!!

  • thee29

    பற்றி எரியும் காட்டுத்தீயால் கண்ணீரில் தத்தளிக்கும் கலிபோர்னியா மாகாணம்!: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..!!

  • vadothara29

    குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி!: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

  • dmk28

    புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்