காலிஃப்ளவர் பிரியாணி
2020-01-22@ 15:02:36

தேவையான பொருட்கள்
நெய், எண்ணெய் - 1/2 கப்,
பிரியாணி இலை - 1,
பட்டை - 3, ஸ்டார் பூ - 1,
ஏலக்காய் - 2,
பெரிய வெங்காயம் - 3,
பச்சை மிளகாய் - 5,
தக்காளி - 2, இஞ்சி,
பூண்டு, பேஸ்ட் - 2 டீஸ்பூன்,
புதினா - 1 கப்,
கொத்தமல்லி - 1/2 கப்,
காலிஃப்ளவர் - 1 (பெரியது),
தயிர் - 1/2 கப்,
சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்,
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
தேங்காய்ப்பால் - 2½ கப்,
அரிசி (பாஸ்மதி - 2 கப்.
செய்முறை
குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, பட்டை, ஸ்டார் பூ, ஏலக்காய் சேர்த்து அதில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி பின் தக்காளி, இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பின் புதினா, கொத்தமல்லி, காலிஃப்ளவர், தயிர் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் சில்லி பவுடர், கரம் மசாலா, உப்பு, தேங்காய்ப்பால் (தண்ணீருக்குப் பதிலாக தேங்காய்ப்பால் சேர்க்கவும்) சேர்த்து அதனுடன் அரிசியை சேர்க்கவும். மிதமான சூட்டில் ஒரு விசில் வரும் வரை வைத்து இறக்கினால் சுவையான காலிஃப்ளவர் பிரியாணி தயார். இதனுடன் தயிர் பச்சடி மற்றும் காலிஃப்ளவர் சில்லி சேர்த்து பரிமாறவும்.
குறிப்பு: பிரியாணி செய்ய காலிஃப்ளவரை பெரிய துண்டுகளாக நறுக்கி வெது வெதுப்பான நீரில் 10 நிமிடம் வைத்து கழுவிய பின்
உபயோகிக்கவும்.
மேலும் செய்திகள்
நெல்லிக்காய் சாதம்
ப்ளெயின் குஸ்கா
கேரட் பொங்கல்
கத்தரிக்காய் பச்சடி
அவல் முந்திரி பொங்கல்
காலிபிளவர் பாப்கார்ன்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!