SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காய்கறி பொங்கல்

2020-01-14@ 13:12:46

தேவையானவை

பீன்ஸ், கேரட், பீட்ரூட் கலவை - 1 கப்
பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
பல்லாரி - 1    
தக்காளி - 1
வேக வைத்த பச்சைப்பட்டாணி - 1 கப்
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பட்டை, சீரகம், மிளகு- 1 ஸ்பூன்
ஏலக்காய், லவங்கம் - தலா 2
நெய் - 2 ஸ்பூன்


செய்முறை

முதலில் அரிசி, பாசிப்பருப்பை ஒன்றாக கழுவி, பானையில் ஆறரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சேர்க்கவும். இதை மிதமான தீயில் நன்றாக வேக விடவும். பாதியளவு வெந்ததும் நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வேக விடவும். தொடர்ந்து பல்லாரி, தக்காளி, இஞ்சி போன்றவற்றைப் பொடியாக நறுக்கவும். அதன் பின் நெய், எண்ணெயைக் காயவைத்து மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய், தாளித்து, வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கி காய்கறிக்கலவையைச் சேர்க்கவும். சிறிதளவு உப்பும் சேர்த்து நன்கு வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். 2 நிமிடம் வதக்கி காய் வெந்ததும் பொங்கலில் சேர்த்து நன்கு கிளறவும்.காய்கறி பொங்கல் ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • police20

    அமெரிக்க அதிபர் வருகை: பாதுகாப்பு பணியில் 12,000 போலீசார்கள் மற்றும் பல ரகசிய படைகள் ஈடுபாடு

  • award20

    பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

  • 24-02-2020

    24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்