மலபார் மீன் கறி
2020-01-07@ 15:54:42

தேவையானவை
மீன் - 1 கிலோ
தேங்காய் - ஒரு மூடி
புளி - 50 கிராம்
இஞ்சி, பூண்டு - 50 கிராம்
பல்லாரி - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 5
சின்ன வெங்காயம் - 100 கிராம்
வெந்தயம் - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
மல்லித்தூள் - 3 ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 குழிக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காயை
மிக்சியில் அரைத்து பால் எடுக்கவும். முதல் பாலை தனியாக வைத்துவிட்டு
மீண்டும், இரண்டு முறை பால் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். புளியை
சிறு துண்டுகளாக வெட்டி வெந்நீரில் போட்டு வையுங்கள். பூண்டு, பச்சை
மிளகாய், இஞ்சி, சின்ன வெங்காயம் அனைத்தையும் தட்டி வைத்துக் கொள்ளவும்.
பல்லாரியை நீளமாகவும், தக்காளியை சிறு துண்டுகளாகவும் வெட்டிக் கொள்ளவும்.
வாணலி தேங்காய் எண்ணெய் சூடானதும் வெந்தயம், கறிவேப்பிலையை போட்டு
தாளிக்கவும். இத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை
போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு வெட்டி வைத்து இருக்கும்
பல்லாரியை சேர்த்து நன்றாக வதக்கவும். தொடர்ந்து தக்காளி, உப்பை சட்டியில்
போட்டு வதக்கவும். தீயை மிதமாக வைத்து, அனைத்து பொடிகளையும் போட்டு
கிளறவும். பின் ஊறிய புளி, இரண்டாவதாக எடுத்த தேங்காய் பாலையும் சேர்த்து 2
நிமிடம் கொதிக்க விடவும். அதன் பிறகு மீனை போட்டு மிதமான தீயில் 10
நிமிடம் வேக வைக்கவும். பின்னர் முதல் தேங்காய்ப்பாலை ஊற்றி அது கொதிக்கும்
முன் அடுப்பை அனைத்து விடவும். இப்போது ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி
மூடி வைத்துவிட்டு 2 மணி நேரத்துக்குப் பின் சாப்பிடவும்.
Tags:
Malabar fish curryமேலும் செய்திகள்
வாழை இலை ஃபிஷ் ஃப்ரை
கேரளா நெத்திலி குழம்பு
விறால் மீன் குழம்பு
பரலா ஜெர்க் ஃபிஷ்
காரைக்குடி மீன் மசாலா
வஞ்சிர மீன் ஃபிஷ் ஃபிங்கர்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!