SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிக்கன் ஸ்டூ

2019-12-31@ 12:49:51

தேவையானவை:

சிக்கன் - 750 கிராம்
தேங்காய் எண்ணை - 3 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பட்டை - 1 துண்டு
மிளகு - 3
பிரிஞ்சு இலை - 1
வெங்காயம் - 2 கப்
இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கியது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
முதலாம் தேங்காய்ப்பால் - 1 கப்
இரண்டாம் தேங்காய்ப்பால் - 1 கப்
உருளைக்கிழங்கு - 1/4 கப்
கேரட் - 1/4 கப்
முந்திரி பேஸ்ட்- 2 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5, உப்பு - தேவைக்கு.


செய்முறை:

கடாயில் எண்ணை சேர்த்து அதில் பட்டை, ஏலக்காய், பிரிஞ்சு இலை, கிராம்பு தாளிக்கவும். பிறகு அதனுடன் வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். அதன் பிறகு சிக்கனை, கேரட், உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் இரண்டாம் தேங்காய்ப்பாலை சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். பிறகு அதில் முந்திரி பேஸ்ட் மற்றும் முதலாம் தேங்காய்ப்பாலை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். மற்றொரு கடாயில் எண்ணை சேர்த்து அதில் சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி இதில் சேர்க்கவும். சூடான ஆப்பம் மற்றும் இடியாப்பத்திற்கு சுவையா இருக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • award20

    பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

  • 24-02-2020

    24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்