மைசூர் பாக்
2019-12-24@ 15:26:55

தேவையான பொருட்கள்
கடலை மாவு - 1 கப்,
சர்க்கரை - 2½ கப்,
வெண்ணெய் - 1/2 கிலோ.
செய்முறை
முதலில் ஒரு வாணலியில் வெண்ணெயை உருக்க வேண்டும். நெய் பக்குவம் இல்லாமல் வெண்ணெய் கரையும்படி இருத்தல் வேண்டும். வாணலியில் சர்க்கரை மூழ்கும்படி தண்ணீர் விட்டு சர்க்கரை கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில்் ஏற்றி ஒரு கம்பி பதம் வந்ததும் கடலை மாவை சேர்த்து கிளறவும். கட்டி இல்லாமல் நன்கு கைவிடாமல் கிளறவும். இடையிடையே உருக்கிய நெய் விட்டு கைவிடாமல் கிளறவும். அந்த கலவை நெய் முழுவதையும் இழுத்துக்கொண்டு ஓரங்களில் பொரிந்து வரும் பதம் வந்ததும் இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி லேசான சூட்டில் வில்லைகள் போட்டால் ஆஹா சுவையோ சுவை அட்டகாசமான இலகுவான மைசூர் பாக் ரெடி.
Tags:
மைசூர் பாக்மேலும் செய்திகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்