முடக்கத்தான் கீரை சூப்
2019-12-18@ 17:33:23

தேவையான பொருட்கள்:
முடகத்தான் கீரை - 100 கிராம்
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
தக்காளி - 1
பூண்டு - 5 பற்கள்
சாம்பார் வெங்காயம் - 5
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முடகத்தான் கீரையை நீரில் அலசி சுத்தம் செய்யவும். அதன் காம்புடன் சேர்த்து நறுக்கி கொள்ளவும். நறுக்கிய முடகத்தான் கீரையை தண்ணீர் ஊற்றி, சீரகம், மிளகு, வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வேக வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின்பு அதனை இறக்கி வடிகட்டி எடுத்து அதனுடன் நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகளை போட்டு பரிமாறவும்.
குறிப்பு:
இதன் பயன்கள் என்னவென்றால், நமது மூட்டுகளில் உள்ள வலியை குறைப்பதுதான். மூட்டுக்களில் ஏற்படும் உபாதைகளுக்கு காரணம் மூட்டுகளில் தங்கும் யூரிக் அமிலம், புரதம், கொழுப்பு திரட்சி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள் தான். இவைகளை கரைத்து வெளியேற்றும் சக்தி முடகத்தான் கீரைக்கு உண்டு. முடகத்தான் சூப் வாரம் ஒருமுறை உண்டு வந்தால் முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.
மேலும் செய்திகள்
பனிவரகு நாட்டுக்காய்கறி சூப்
வெர்ஜீனியா பீனட் சூப்
எலுமிச்சை கொத்தமல்லி சூப்
முருங்கைக்காய் சூப்
தக்காளி சூப்
பீட்ரூட் சூப்
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்