SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தண்டை

2019-12-05@ 14:31:15

தேவையான பொருட்கள்

குளிர்ந்த பால் - 200 மில்லி,
சர்க்கரை - 200 கிராம்,
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்,
 பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்,
மிளகு (முழு) - 1/2 டீஸ்பூன்,
குல்கந்து - 2 டேபிள் ஸ்பூன்,
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்,
தோல் நீக்கிய பாதாம் பிஸ்தா - 50 கிராம்,
சுடுதண்ணீர் - 1 கப்,
முலாம்பழவிதை (Melon) - 20 கிராம்,
குங்குமப்பூ - 1 சிட்டிகை,
ஐஸ்கட்டி - 2 to 4,
ரோஜா இதழ்கள் - 1 டீஸ்பூன்.

மேலே அலங்கரிக்க

ரோஜா இதழ்கள் - தேவைக்கேற்ப, நறுக்கிய உலர்பழங்கள் - தேவைக்கேற்ப.


செய்முறை
 

(தண்டை பேஸ்ட் செய்முறை)

ஒரு பாத்திரத்தில் சுடுதண்ணீர் ஊற்றி பிஸ்தா, தோல் நீக்கிய பாதாம், கசகசா, மிளகு, ரோஜா இதழ்கள், பெருஞ்சீரகம் ஆகியவற்றை 5 மணி நேரம் ஊற வைக்கவும். அதன்பின் ஊறிய பொருட்களை மிக்சியில் தண்ணீருடன் சேர்த்து நன்கு மைய அரைக்கவும். பின் சர்க்கரை, குல்கந்து, குங்குமப்பூ, ஏலக்காய் பொடி ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.குடிக்கும் முறை2 அல்லது 3 டேபிள் ஸ்பூன் தண்டை பேஸ்டை ஒரு கண்ணாடி டம்ளரில் போட்டு குளிர்ந்த பால் அல்லது பால் சேர்த்து கலந்து ரோஜா இதழ்கள், நறுக்கிய நட்ஸை கொண்டு அலங்கரித்து பரிமாறவும். வேண்டுமெனில் ஐஸ்கட்டி சேர்த்துக்கொள்ளலாம். இந்த ஜூஸ் மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது. இதை வடஇந்தியாவில் ஹோலி பண்டிகை மற்றும் மகா சிவராத்திரி அன்று செய்வார்கள். இதை நாம் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து ஒரு வாரம் வரைக்கும் உபயோகப்படுத்தலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sabarimalai-3

    பக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்!: புகைப்படங்கள்

  • rainpurevi111

    தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

  • radish3

    புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

  • farmers_proteeee11

    மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

  • 03-12-2020

    03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்