பாதாம் பூசணி கபாப்
2019-11-27@ 14:49:37

தேவையானவை
பூசணிக்காய் - 1/2 கிலோ
பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு - 2 மேசைக்கரண்டி பொடியாக நறுக்கியது
ஜீரகம் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி பொடித்தது - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
ஜாதிக்கா பவுடர் - ஒரு சிட்டிகை
சாட் மசாலா - 1 மேசைக்கரண்டி
ஆம்சூர் தூள் - 1 மேசைக்கரண்டி
நெய் - 40 கிராம்
பாதாம் துருவியது - 20 கிராம்
பாதாம் நறுக்கியது - 40 கிராம்
செய்முறை
பூசணிக்காயை நன்று கழுவி தோலினை நீக்கி நன்கு
துருவிக்ககொள்ளவும். கடாயில் நெய்யை காய்ச்சி அதில் இஞ்சி பூண்டு, பச்சை
மிளகாய், சீரகம் மற்றும் எல்லா மசாலாக்களையும் சேர்த்து வதக்கவும். அதில்
துருவிய பூசணிக்காயை சேர்க்கவும். பூசணிக்காய் நன்று வெந்து அதில் உள்ள
தண்ணீர் நன்கு சுண்டும் வரை வதக்கவேண்டும். பிறகு அதில் நறுக்கிய பாதாமை
சேர்த்து ஐந்து நிமிடம் வதக்க வேண்டும். பிறகு இந்த கடாயை அடுப்பில்
இருந்து இறக்கவும். பூசணி பாதம் கலவை நன்கு ஆறியதும் சின்னதாக கபாப் போல்
தட்டிக் கொள்ளவும். இதன் மேல் துருவிய பாதாமினை சேர்த்து மருபடியும்
கடாயில் நெய் சேர்த்து தட்டி வைத்துள்ள கபாபினை அதில் இரண்டு பக்கம் நன்கு
சிவந்ததும் சூடாக பரிமாறவும்.
Tags:
Almond Pumpkin Kebabமேலும் செய்திகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்