சோளே
2019-11-26@ 14:21:47

தேவையானவை
காய்ந்த பட்டாணி - 3/4 கப்
எலுமிச்சை சாறு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தக்காளி - 1 கப்
வெங்காயம் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
ஆம்சூர் பவுடர் - 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா - 2 டீஸ்பூன்
சோடா மாவு - 1 சிட்டிகை
கொத்தமல்லி - அலங்கரிக்க
இஞ்சி துருவியது - 1 டீஸ்பூன்
பூண்டு துருவியது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சீரதத் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி பவுடர் - 1/2 டீஸ்பூன்
வெந்தயப்பொடி - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
ஃபிரஷ் கிரீம் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
செய்முறை :
பட்டாணியை இரவே ஊறவைக்கவும். இதனை உப்பு, மஞ்சள் தூள் வேகவைத்து வடிகட்டி தனியே வைக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி, உடன் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். எண்ணை தனியாக பிரிந்து தக்காளி எல்லாம் மசிந்து சுருண்டு வரும் வரை வதக்க வேண்டும். பிறகு வேகவைத்துள்ள பட்டாணியை சேர்த்து நன்றாக கிளறவும். இதில் எல்லா மசாலா பொருட்களையும் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு சிறதளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். கடைசியாக வெண்ணெய், கிரீம் மற்றும் கொத்தமல்லி தழையை சேர்த்து அலங்கரிக்கவும். இதை சமோசாவுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
மேலும் செய்திகள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!