SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிக்கன் சாப்ஸ்

2019-11-13@ 15:20:51

என்னென்ன தேவை?

சிக்கன் பீஸ் - 4,
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
மோர் - 2 டம்ளர்,
முட்டை - 1,
பால் - 4 டீஸ்பூன்,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்,
மைதா - 1/2 கப்,
கார்ன்ஃப்ளேக்ஸ் - 2 கைப்பிடி,
மிளகுத்தூள், ஓரிகானோ, மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - தலா 1/2 டீஸ்பூன்,
சில்லி ப்ளேக்ஸ் - 1/4 டீஸ்பூன்,
பொரிக்க எண்ணெய்,
உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் மோர், உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, சிக்கன் சேர்த்து கலந்து 3 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் முட்டை, பால், வெண்ணெய், உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, கார்ன்ஃப்ளேக்ஸ், மிளகுத்தூள், ஓரிகா னோ, மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.

மோரில் ஊறிய சிக்கனை எடுத்து முட்டை கலவையில் நனைத்து மைதா கலவையில் பிரட்டி மீண்டும் முட்டை மற்றும் மைதா கலவையில் பிரட்டி கொள்ளவும். இவ்வாறு அனைத்து சிக்கனையும் இருமுறை பிரட்டி வைத்து கொள்ளவும். கடாயில் பொரிக்க எண்ணெயை சூடாக்கி மிதமான சூட்டில் வைத்து சிக்கனை தனித்தனியே பொரித்தெடுக்கவும். அப்பொழுதுதான் சிக்கன் உள் பக்கம் வரை வேகும். டொமேட்டோ கெட்சப், மையோ னைஸ் கொண்டு சூடாக பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2020

    26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-09-2020

    25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்