SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டர் நாண்

2019-11-04@ 16:49:55

தேவையானவை

மைதா மாவு - 2 கப்
ட்ரை ஈஸ்ட் - 1 ஸ்பூன்
வெண்ணெய் - 5 ஸ்பூன்
சர்க்கரை - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 2 ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்


செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெதுவெதுப்பாக சூடேற்றவும். அதில் ட்ரை ஈஸ்ட், சர்க்கரை சேர்த்து கரைத்து வைக்கவும். பின்னர் மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, தயிர், பாதி வெண்ணெய் சேர்த்து கலந்து, ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கலந்த நீரை ஊற்றி, நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு போல் பிசைய வேண்டும். பிறகு அதனை 1 அல்லது 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு பார்த்தால், மாவு நன்கு உப்பியிருக்கும். அதனை மீண்டும் ஒரு முறை பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பை பற்ற வைத்து, தீயை மிதமாக வைத்து, அதன் மேல் தேய்த்து வைத்துள்ள மாவை வைக்க வேண்டும். நாணானது நன்கு உப்பி மேலே வரும் போது, அதன் மேல் வெண்ணெயை தடவி, மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப்போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும். அவ்வளவுதான்... பட்டர் நாண் தயார்...!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

  • vietnam22

    வியட்நாமை துவம்சம் செய்த கனமழை!: வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைபேரிடர்களில் சிக்கி 111 பேர் பலி.. பலர் மாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்