SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தக்காளி பிரியாணி

2019-10-29@ 17:25:06

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி - 1 கப் (10 நிமிடம் ஊற வைக்கவும்),
தக்காளி - 11,
எண்ணெய், நெய் - 1/4 கப்,
சோம்பு - 1/2 டீஸ்பூன்,
பட்டை - 1,
கிராம்பு - 2,
அன்னாசி பூ - 1,
கடல் பாசி - 1,
ஏலக்காய் - 2,
மராட்டி முக்கு - 1,
வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 3,
உப்பு - தேவைக்கு.
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
சிக்கன் மசாலா - 1/4 டீஸ்பூன்,
புதினா, கொத்தமல்லி - 1/2 கப்.


செய்முறை

குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசி பூ, கடல் பாசி, ஏலக்காய், மராட்டி முக்கு போடவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து பின் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பின் தக்காளியை சேர்த்து மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிக்கன் மசாலா, புதினா, கொத்தமல்லி போட்டு நன்றாக வதக்கவும். பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் ஊற வைத்த அரிசியை போட்டு சிறிதளவு நெய் சேர்த்து மிதமான சூட்டில் 15 நிமிடம் வைக்கவும். இப்பொழுது சுவையான தக்காளி பிரியாணி தயார். இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து பரிமாறலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pune1

    புனேவில் பயங்கர வெடிச் சத்தத்துடன் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரை..!!

  • hathraas1

    நாட்டையே உலுக்கிய ஹாத்ராஸ் இளம்பெண் கொடூர கொலை!: குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க வெடிக்கும் போராட்டங்கள்...உரிய நீதி கிடைக்குமா?

  • chinamartyrs1

    நாட்டுக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் வகையில் சீன தலைநகர் பீஜிங்கில் தியாகிகள் தினம் அனுசரிப்பு!: அதிபர் ஜி ஜின்பிங், தலைவர்கள் பங்கேற்பு..!!

  • arch1

    அர்மீனியா - அசர்பைஜான் இடையேயான மோதல் முழுமையான போராக மாறியது: சண்டையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100ஐ கடந்தது..!!

  • 01-10-2020

    01-10-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்