SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீட்பால் வெஜ் சூப்

2019-10-10@ 14:30:36

என்னென்ன தேவை?

மீட்பால் செய்ய...

மட்டன் பீஸ் - 50 கிராம்,
மஞ்சள் தூள்,
மிளகாய்த்தூள்,
தனியாத்தூள்,
சீரகத்தூள்,
கரம்மசாலாத்தூள்,
இஞ்சி பூண்டு விழுது,
பப்பாளிக்காய் விழுது - தலா 1/4 டீஸ்பூன்,
முட்டை - 1,
பொட்டுக்கடலை மாவு - 1/4 கப்,
பச்சைமிளகாய்,
புதினா, கொத்தமல்லி சேர்த்து அரைத்த விழுது - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

சூப் செய்ய...

பீன்ஸ் - 10,
கேரட் - 1/2 துண்டு,
காலிஃப்ளவர் - 1/4 துண்டு,
வெஜிடபிள் ஸ்டாக் - 5 கப்,
மிளகுத்தூள்,
உப்பு - தேவைக்கு,
வெண்ணெய் - 1/2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம்,
பூண்டு,
ஸ்பிரிங் ஆனியன் - சிறிது.


எப்படிச் செய்வது?

மீட்பால் செய்ய கொடுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சின்னச் சின்ன உருண்டைகளாக செய்யவும். காய்கறிகளை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி வெஜிடபிள் ஸ்டாக், காய்கறிகள், உப்பு, மிளகுத்தூள், மட்டன் உருண்டைகளையும் சேர்த்து வேக விடவும். அனைத்தும் வெந்ததும் இறக்கி ஸ்பிரிங் ஆனியன் தூவி சூடாக பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்