SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்டப்டு பாகற்காய்

2019-10-09@ 16:40:53

தேவையான பொருட்கள்:
 
மீடியம் சைஸ் பாகற்காய் - 5
பெரிய வெங்காயம் - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பூண்டு - 6 பல்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
புளி - சிறிய துண்டு
கடலைமாவு - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 4 குழிக்கரண்டி
தனியாத்தூள் – தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.


செய்முறை:
 
பாகற்காயை நடுவில் வகுந்து விதைகளை அகற்றி விடுங்கள். உள்பகுதியில் லேசாக உப்பு தடவி அரைமணி நேரம் கழித்து நன்றாக கழுவி  சுத்தம் செய்யுங்கள். கசப்பு நீங்கிவிடும். வெங்காயத்தை சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, சீரகம்,  கறிவேப்பிலை, பூண்டு போட்டு தாளித்து வெங்காயம், மஞ்சள்தூள், உப்பு போட்டு வதக்குங்கள். வெங்காயம் பொன்னிறமானதும், புளியை  தண்ணீரில் கரைத்து ஊற்றுங்கள். பின் கடலைமாவு, மிளகாய்த்தூளைப் போட்டு நன்றாக கிளறி, கொத்தமல்லித் தழையை போட்டு இறக்கி  ஆறவைத்துக் கொள்ளுங்கள்.
 
இந்த கலவையை பாகற்காயின் உள்ளே வைத்து நூலால் தனித்தனியாக கட்டி விடுங்கள். வாணலியை மிதமான தீயில் வைத்து மீதமுள்ள  எண்ணெயை ஊற்றி அதில் பாகற்காயை போட்டு வேகவையுங்கள். 15 நிமிடங்கள் வேக வேண்டும். 3 நிமிடத்துக்கு ஒருமுறை பாகற்காய்களை  திருப்பி விடவேண்டும். பச்சைநிறம் மங்கி வெந்ததும் இறக்குங்கள். அவ்வளவுதான் ஸ்டப்டு பாகற்காய் தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

  • anna-15

    பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

  • gujarat-14

    கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்