SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீல்மேக்கர் கிரேவி

2019-10-09@ 16:39:40

தேவையான பொருட்கள்:
 
மீல் மேக்கர் - 1/2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - தேவையான அளவு
பால் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
 
அரைக்க தேவையான பொருள்கள்:
 
தேங்காய் - 2 மேசைக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
தக்காளி - 2
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு


செய்முறை:
 
கொத்தமல்லி, பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் மீல் மேக்கரைப்  போட்டு சில நிமிடங்கள் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீல் மேக்கரை எடுத்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, தனியாக  வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.வெங்காயம் நன்றாக  வதங்கியதும் தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி இறக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் அரைப்பதற்கு கொடுத்துள்ள  எஞ்சிய பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து  மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.பின் அதில் மீல் மேக்கரை சேர்த்து, முக்கால் கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி மிதமான தீயில் 1 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும்  குக்கரைத் திறந்து, கிரேவியை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொத்தமல்லியைத் தூவினால், மீல் மேக்கர் கிரேவி தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakisthan21

    ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

  • kasirangaa21

    கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

  • kamaladance21

    அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

  • thirupati21

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

  • police21

    காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்