பைனாப்பிள் ரசம்
2019-10-09@ 16:38:06

தேவையான பொருட்கள்:
அன்னாசிப் பழம் ஸ்லைஸ் - 4
வேகவைத்த துவரம் பருப்பு - அரை கப்
தக்காளி - 1
மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
கடுகு, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
ரசப்பொடி - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 3
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மிளகுடன் சீரகம், பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். 2 அன்னாசி துண்டுகளை விழுதாக அரைத்து எடுக்கவும். மீதமுள்ள 2 அன்னாசி துண்டுகளைப் பொடியாக நறுக்கவும். பாத்திரத்தில் மிளகு விழுதுடன் அன்னாசி விழுது, மஞ்சள்தூள், ரசப்பொடி, உப்பு, பாதியளவு தக்காளி, தண்ணீர், வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, மீதமுள்ள தக்காளி, அன்னாசித் துண்டுகள் சேர்த்து வதக்கவும். இதைக் கொதிக்கும் ரசத்தில் சேர்த்து ஒரு கொதிவிடவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சுவையான பைனாப்பிள் ரசம் தயார்.
மேலும் செய்திகள்
நெல்லிக்காய் சாதம்
ப்ளெயின் குஸ்கா
கேரட் பொங்கல்
கத்தரிக்காய் பச்சடி
அவல் முந்திரி பொங்கல்
காலிபிளவர் பாப்கார்ன்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!