வெண்டைக்காய் தயிர் பச்சடி
2019-09-30@ 17:40:55

தேவையான பொருட்கள்
வெண்டைக்காய்த்துண்டுகள் - 1 கப்,
தயிர் - 1/2 கப்,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
பச்சை மிளகாய் - 2,
உப்பு, கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு,
காய்ந்த மிளகாய் - 1,
சீரகம் - 1 டீஸ்பூன்.
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு
சேர்க்கவும். கடுகு வெடித்ததும் வெண்டைக்காய்த்துண்டுகளை சேர்த்து
வதக்கவும். உப்பு, கறிவேப்பிலை சேர்க்கவும். காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.
பச்சை மிளகாய், தேங்காய்த்துருவல், சீரகம் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
அரைத்த விழுதை வெண்டைக்காய் கலவையில் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்துக்
கொதிக்க விடவும். ஆறிய பிறகு தயிர் சேர்த்து கலந்து பரிமாறவும். மூளைக்கு
வலிமை சேர்ப்பதில்
வெண்டைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
Tags:
Ladyfinger curdsமேலும் செய்திகள்
பனீர் பால்ஸ்
கிழங்கு ரோல் சமோசா
ஃப்ரூட் கஸ்டர்ட்
லெமன் சேமியா பிடி கொழுக்கட்டை
வெள்ளரிக்காய் தக்காளி சாலட்
மாம்பழ சேமியா குல்ஃபி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்