SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வஞ்சிரம் மீன் குழம்பு

2019-09-19@ 13:10:55

தேவையான பொருட்கள்

வஞ்சிரம் மீன் - 200 கிராம்,
சிறிய வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி - 150 கிராம்,
இஞ்சி, பூண்டு விழுது - 80 கிராம்,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை - 1 கொத்து,
கடுகு - 5 கிராம்,
வெந்தயம் - 5 கிராம்,
மிளகு - 10 கிராம்,
சீரகம் - 5 கிராம்,
சோம்பு - 5 கிராம்,
தேங்காய் விழுது - 100 கிராம்,
எண்ணெய் - 100 மி.லி.கிராம்,
கலந்த மிளகாய்த்தூள் - 20 கிராம்,
மஞ்சள் தூள் - 5 கிராம்,
தனி மிளகாய்த்தூள் - 10 கிராம்,
புளி - 15 கிராம்,
உப்பு - தேவைக்கு,
பெரிய வெங்காயம் - 1.


செய்முறை

மிளகு, சீரகம், ேசாம்பு, சின்ன வெங்காயத்தை எண்ணையில் வதக்கி பிறகு அரைத்து தனியாக வைக்கவும். கடாயில் எண்ணை சேர்த்து அதில் கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும், பிறகு பெரிய வெங்காயத்தை ேசர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் வதக்கியதும் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கலந்த மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தக்காளி நன்கு மசிந்து வரவேண்டும். பிறகு புளி தண்ணீர் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவேண்டும். பிறகு மீன் துண்டுகளை சேர்த்து மூடிப்போட்டு அடுப்பை அணைத்துவிடவேண்டும். மீன் அந்த சூட்டிலேயே வெந்திடும். பிறகு கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அலங்கரிக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

  • ast23

    ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

  • chinacrob23

    சீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்!: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது யுக்தி..!!

  • singapore-robo23

    கொரோனா பரிசோதனைக்கும் வந்துவிட்டது ரோபோ!: சிங்கப்பூரில் மூச்சுக் குழாயிலிருந்து மாதிரிகளை சேகரிக்கும் ரோபோக்களை உருவாக்கி விஞ்ஞானிகள் அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்