SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிக்கன் தம் பிரியாணி

2019-09-05@ 14:02:43

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ (பெரிய துண்டுகளாக),
பாஸ்மதி அரிசி - 1/2 கிலோ,
புதினா, கொத்தமல்லி - 1 கப்,
பச்சை மிளகாய் - 5,
எலுமிச்சம்பழம் - 1, எண்ணெய்,
நெய் - 1 கப், தயிர் - 1 கப்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
கரம் மசாலா - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன், பட்டை - 2,
கிராம்பு - 2,
ஜாதிக்காய் - 1,
ஏலக்காய் - 2,
சீரகம் - 1 டீஸ்பூன், (சாகி சீரகம்),
மிளகு - 10,
நட்சத்திரப்பூ - 1,
பிரியாணி இலை - 2,
Fried onion - 1 கப்,
உப்பு - தேவைக்கு.


செய்முறை:

பாஸ்மதி  அரிசியைத் தவிர சிக்கனுடன் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து, தயிர் சேர்த்து ஊற வைக்கவும். (2 முதல் 4 மணி நேரம் வரை ஊற வைக்கவும்) ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி, பச்சை மிளகாய் - 2, வெங்காயம் - 2 சேர்த்து வதக்கவும். பின் ஊற வைத்த மசாலா சிக்கனை 15 நிமிடம் வேக வைக்கவும். பின் வேக வைத்த அரிசியை மேலே சேர்த்து, நெய், குங்குமப்பூ, பால், லெமன், கரம் மசாலா, Fried onion, புதினா, கொத்தமல்லி  தூவி 15 நிமிடம் தம் போட வேண்டும். இப்போது சிக்கன் தம் பிரியாணி ரெடி. இதனுடன் தயிர் பச்சடி மற்றும் சிக்கன் குருமா சேர்த்து பரிமாறவும். பாஸ்மதி அரிசியை வேக வைக்கும் முறை மற்றும் தம் போடும் முறையை முன்பக்கம் பார்க்கவும்.

குறிப்பு: தம் பிரியாணியை சூடாக சாப்பிடுவதைவிட சிறிது ஆற வைத்து சாப்பிட சுவை அதிகரிக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்