SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆட்டுக்கால் சூப்

2019-08-28@ 16:39:27

தேவையான பொருட்கள்:
 
ஆட்டுக்கால் - 250 கிராம்
மிளகு - 2 மேசைக்கரண்டி
தனியா - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 2
சீரகம் - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
தக்காளி - 2
இஞ்சி - 2 அங்குல துண்டு
பூண்டு பல் - 3
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகு, சீரகம், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - தேவையான அளவு


செய்முறை
 
தனியா, மிளகு, சீரகம் மூன்றையும் தனித்தனியே எண்ணெய் இல்லாமல் வறுத்து எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பொடித்து வைக்கவும்.
 காய்ந்த மிளகாய், வெங்காயம் ஒன்று, இஞ்சி, பூண்டு, தக்காளி ஒன்று, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை ஒன்றாக அரைத்து  வைக்கவும்.
முதலில் ஆட்டுக்காலை தீயில் போட்டு சுட்டெடுக்கவும். கடையிலே அப்படி செய்தும் விற்பார்கள். அப்படி செய்வதால் அதிலுள்ள ரோமம் எல்லாம் உதிர்ந்துவிடும். நன்கு சுத்தம் செய்து போதிய அளவு தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 10-15 விசில் வரும்  வரை வேக விடவும்.

எண்ணெய்யை காய வைத்து மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம்  சிறிதளவு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். அதிகம் குழைய தேவையில்லை. அதனால் சிறிதளவு வெந்ததும் வேகவைத்துள்ள  ஆட்டுக்கால் மற்றும் தண்ணீரை இதனுடன் சேர்க்கவும். உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும். இப்பொழுது அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் கலவையை சேர்த்து தீயை குறைத்து வைக்கவும்.பதினைந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். கொத்தமல்லி தூவினால் சுவையான ஆட்டுக்கால் சூப் தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்