SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீன் கிரேவி

2019-08-27@ 16:47:04

என்னென்ன தேவை?

வஞ்சிரம் அல்லது கட்டலா மீன் - 6 துண்டுகள்,
பெரிய வெங்காயம் - 3,
பச்சைமிளகாய் - 2,
தக்காளி - 2,
குழம்பு மிளகாய் பொடி - 1 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
கடுகு, கறிவேப்பிலை - சிறிது,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். பின் குழம்பு மிளகாய் பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கி, 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக வதக்கி, பாதி கிரேவியை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். கழுவி சுத்தம் செய்த மீன் துண்டுகளை கடாயில் சுற்றிவர தனித்தனியாக வைத்து, எடுத்து வைத்த கிரேவியை அதன் மேல் ஊற்றி மூடி போட்டு சிறு தீயில் வைக்கவும். பிறகு உடையாமல் திருப்பிப் போட்டு வெந்ததும் இறக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

  • ast23

    ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

  • chinacrob23

    சீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்!: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது யுக்தி..!!

  • singapore-robo23

    கொரோனா பரிசோதனைக்கும் வந்துவிட்டது ரோபோ!: சிங்கப்பூரில் மூச்சுக் குழாயிலிருந்து மாதிரிகளை சேகரிக்கும் ரோபோக்களை உருவாக்கி விஞ்ஞானிகள் அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்