SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெஜ் பாஸ்தா

2019-08-21@ 15:19:02

தேவையான பொருட்கள்:
 
பாஸ்தா - 500 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கேரட் - 1 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
தக்காளி சாறு - 4 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 4 கப்


செய்முறை:
 
முதலில் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் விட்டு, அதில் பாஸ்தாவை போட்டு, எண்ணெய் மற்றும் சிறிது உப்பை போட்டு, நன்கு கலக்கி, தட்டைப் போட்டு மூடி, சிறிது நேரம் வேக வைத்து, வெந்துள்ளதா என்று பார்த்து, பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டி, பிறகு குளிர்ந்த நீரால் ஒரு முறை அலசவும்.பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய், வெங்காயம், கேரட் மற்றும்  குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். காய்கள் அனைத்தும் ஓரளவு வெந்ததும், அதில் சிறிது உப்பை போட்டு, சிறிது நேரம் வேக வைக்கவும். பின்னர் அதில் தக்காளி சாறு, கரம் மசாலா தூள், சீரகப் பொடி, மிளகாய் தூள், மாங்காய் பொடி, மிளகுத் தூள் மற்றும் சில்லி சாஸ் விட்டு நன்கு கிளறவும். அனைத்துப் பொருட்களும் நன்கு ஒன்று சேர்ந்ததும், அதில் பாஸ்தாவை போட்டு, நன்கு 5 நிமிடம் கிளறி, பின் அதனை இறக்கவும். சுவையான ஈஸியான பாஸ்தா தயார். இதன்மேல் கொத்தமல்லி மற்றும் துருவிய சீஸ் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 01-12-2020

    01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gurunanak30

    குருநானக் ஜெயந்தி!: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..!!

  • bushfire30

    ஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ!: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..!!

  • thiruvannamalai30

    அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது!: புகைப்படங்கள்

  • vivasayigal30

    நைஜீரியாவில் தீவிரவாதிகள் அட்டூழியம்!: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்