பனீர்-புதினா சமோசா
2019-08-20@ 17:24:00

தேவையான பொருட்கள்
மைதா - 1 கிலோ,
நெய் - 200 கிராம்,
தண்ணீர் - 400 மி.லி.,
சால்ட் - தேவையான அளவு,
எண்ணெய் - 2 லிட்டர்,
மசாலா:
காலி ஃபிளவர் - 1 கிலோ,
பனீர் - 300 கிராம் (சிறிதாக நறுக்கியது),
புதினா - 1 கட்டு,
கேரட் - 50 கிராம்,
பீன்ஸ் - 50 கிராம்,
குடை மிளகாய் - 1,
தக்காளி - 200 கிராம்,
வெங்காயம் - 100 கிராம்,
நெய் - 100 கிராம்,
சீரகம் - 5 கிராம்,
சோம்பு - 5 கிராம்,
மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், காஷ்மீரி சில்லி, கரம் மசாலா, மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப,
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் அரைத்தது - 30 கிராம்,
உப்பு - தேவைக்கு.
செய்முறை
மைதாவுடன் உப்பு சேர்த்து நன்கு கலக்கி, நெய்யை சிறிது
சூடு செய்து அதில் ஊற்றி, பின்பு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து 30
நிமிடம் ஊற வைக்கவும். ஒரு வாணலியில் நெய் ஊற்றி, சீரகம், சோம்பு, இஞ்சி,
பூண்டு விழுது சேர்க்கவும். வெட்டி வைத்த வெங்காயம், தக்காளி சேர்த்து
நன்கு வதக்கவும். தனியாக வேக வைத்த மேற்கூறிய காய்கறிகளை இந்த கலவையுடன்
சேர்த்து நன்கு வதக்கவும். பனீரை எண்ணெயில் பொரித்து, அதனையும் சேர்த்து
வதக்கிக்கொள்ளவும்.பிசைந்து வைத்த மாவை, நீள பட்டியாக தேய்த்து, பனீர்
மசாலாவை வைத்து சிறிது நீர் தடவி நீள வாக்கில் மடித்து வைக் கவும். எண்ணெய்
காய்ந் தவுடன் சமோசாவை பொரித்து எடுக்கவும்.
Tags:
Paneer-mint samosaமேலும் செய்திகள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!