முருங்கைப்பூ ராகி மிக்ஸ் பக்கோடா
2019-08-06@ 17:06:00

தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 200 கிராம்,
முருங்கைப்பூ - 50 கிராம் ,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
சீரகம் - 2 டீஸ்பூன்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
கடலை எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
வரமிளகாய்தூள் - தேவையான அளவு,
தண்ணீர் - தேவையான அளவு,
மல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை:
ஒரு அகலமான பாத்திரத்தில் ராகி மாவு, பொடியாக நறுக்கிய முருங்கைப்பூ, சின்ன வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை, உப்பு, வர மிளகாய்தூள், சோம்பு, சீரகம், சிறிது தண்ணீர் சேர்த்து மாவை உதிரியாய் பிசைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சூடானதும், வெங்காய பக்கோடா போல் உதிரி உதிரியாக பொன்னிறமாக பொரிக்கவும்.
குறிப்பு : ராகியில் இரும்புச்சத்து, நார்சத்து, விட்டமின் டி, கால்சியம் மற்றும் அமினோ அமிலம் நிறைந்துள்ளது.
மேலும் செய்திகள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!