புரொக்கோலி பெப்பர் பேன் கேக்
2019-07-30@ 13:06:00

தேவையான பொருட்கள்
புரொக்கோலி : 1
சின்ன வெங்காயம்: 100 கிராம்
உப்பு : தேவையான அளவு
எண்ணெய் : 50 மி.லி
ப்ளக்ஸ் ஸீட் பவுடர் : 200 கிராம்
மிளகுத்தூள் : தேவையான அளவு
நறுக்கிய மல்லித்தழை : சிறிதளவு
காளான் : 100 கிராம்
சீரகம் : 1 டீஸ்பூன்.
செய்முறை
புட் பிராசசரில் நறுக்கிய புரொக்கோலி, காளானை மிக்ஸ்
செய்யவும். அதனுடன் பொடியாய் நறுக்கிய சின்ன வெங்காயம், மிளகுத்தூள்,
சீரகம், உப்பு, மல்லித்தழை ப்ளக்ஸ் ஸீட் பவுடரைச் சேர்த்து கலக்கவும்.
இதில் போதுமான தண்ணீரைச் சேர்த்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். தோசை தவா
காய்ந்ததும், ஒரு கரண்டி அளவு தயார் செய்த கலவையை பேன்கேக் அளவில் ஊற்றி,
எண்ணெயைச் சேர்த்து இருபுறமும் நன்கு வேக விடவும். தக்காளிச் சட்னியுடன்
சுவைக்கவும்.
குறிப்பு : வைட்டமின் கே, சி, போலிக் அமிலம், நார்சத்து, மாவுச்சத்து புரொக்கோலியில் அதிகம் உள்ளது.
Tags:
Broccoli Pepper Pan Cakeமேலும் செய்திகள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்