SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செட்டிநாடு உப்புக்கறி

2019-07-17@ 14:00:39

தேவையான பொருட்கள்

கோழிக்கறி - 1/2 கிலோ,
வரமிளகாய் - 10,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்,
மல்லித்தூள் -1/2 டீஸ்பூன்,  
உப்பு - தேவைக்கு,
இஞ்சி - சிறிது,
பூண்டு - 5 பல்,
சின்ன வெங்காயம் - 10,
கறிவேப்பிலை - சிறிதளவு.


செய்முறை

முதலில் கறியை சிறு துண்டுகளாக நறுக்கி  சுத்தமாக கழுவவும். கறித்துண்டுகளை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறி வைக்கவும். வரமிளகாயை  சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய வைத்து வரமிளகாய் சேர்த்து வதக்கவும். அதன் விதைகள் பொன்னிறமாகும் வரை வதக்கிக்கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கோழிக்கறியை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். பிறகு  உடன் தக்காளி சேர்த்து வதக்கவும். வரமிளகாய், தக்காளி இரண்டும் தன் தோல் தளிந்து வரும்வரை மிதமான தீயில் வதக்க வேண்டும். அதுவே  இந்தக் கறியின்  தனிச்சிறப்பு. மிளகாய்த்தூள், மல்லித்தூள் ஒரு கோப்பைத் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து  தீயை மென்மையாக  வேக விடவும். பிறகு நீர் வற்றி வரும் வரை வறுத்து மேலே சிறிது கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

  • ast23

    ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

  • chinacrob23

    சீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்!: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது யுக்தி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்