SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரட் துவையல்

2019-07-09@ 17:17:45

தேவையான பொருட்கள்

கேரட் துருவல் - 150 கிராம்,
வெங்காயம்,
பூண்டு - 4 பல்,
காய்ந்த மிளகாய் -10,
 உ .பருப்பு - 50 கிராம்,
க. பருப்பு- 50 கிராம்,
கொள்ளு- 20 கிராம்,
கடுகு,கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு,
சர்க்கரை - ½  டீஸ்பூன்


செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், கேரட் துருவல், பூண்டு இலைகளை வதக்கவும். பின்பு மிளகாய்வற்றல், கொள்ளு, உ.பருப்பு, க.பருப்பு இவைகளை வறுக்கவும். சூடு ஆறியவுடன் கேரட் வதக்கிய கலவையை உப்பு, புளி தண்ணீர் சேர்த்து நைசாக மிக்சியில் அரைக்கவும். பின்பு இத்துடன் வறுத்த பருப்புகள், மிளகாய் சேர்த்து கரகரப்பாய் அரைக்கவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, உ.பருப்பு தாளிக்கவும். இத்துடன் கலவையை சேர்த்து கலக்கவும், சுவையான துவையல் ரெடி. தோசை, இட்லி, சப்பாத்திக்கு சுவையான சைட்டிஷ் ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

  • ast23

    ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

  • chinacrob23

    சீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்!: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது யுக்தி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்