கம்பு பணியாரம்
2019-07-02@ 16:34:31

என்னென்ன தேவை?
கம்பு, புழுங்கல் அரிசி - தலா 1 கப்,
பாசிப்பருப்பு - 1/2 கப்,
காய்ந்தமிளகாய் - 4,
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
கடுகு, உளுந்து - தலா 1/2 டீஸ்பூன்,
உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
அரிசி, கம்பு, பாசிப்பருப்பை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊறவைத்து, அதனுடன் தேங்காய்த்துருவல், காய்ந்தமிளகாய் சேர்த்து கிரைண்டரில் அரைத்து எடுக்கவும். சிறிது உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து 4 மணி நேரம் புளிக்க விடவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, இஞ்சி சேர்த்து வதக்கி மாவு கலவையில் கொட்டி நன்கு கலந்து சூடான பணியாரச் சட்டியில் நல்லெண்ணெய் விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
Tags:
கம்பு பணியாரம்மேலும் செய்திகள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!