SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புரோக்கோலி சூப்

2019-03-01@ 12:15:21

தேவையானவை: 

நறுக்கிய புரோக்கோலித் துண்டுகள் - ஒரு கப்
பூண்டு -  8-10 பல்
தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு டேபிள்ஸ்பூன்
அரிசி கழுவிய நீர் - 4 கப்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா கலவை - ஒரு கைப்பிடி அளவு
வெள்ளை மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
ஆரிகானோ அல்லது காய்ந்த துளசி இலை - ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைப்பழம் - அரை மூடி (சாறு பிழியவும்)
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
தோலுரித்த சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்)
பட்டை - கிராம்புத்தூள் - கால் டீஸ்பூன்
சிறுதானிய மாவு - ஒரு டீஸ்பூன்
இந்துப்பு - கால் டீஸ்பூன்.


செய்முறை:

குக்கரில் புரோக்கோலியுடன் பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா, வெங்காயத்தாள், வெங்காயம், 2 கப் அரிசி கழுவிய தண்ணீர், இந்துப்பு சேர்த்து மூடி 3 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் இதை அரைத்து மீதமுள்ள 2 கப் அரிசி கழுவிய தண்ணீர், மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், ஆரிகானோ, பட்டை - கிராம்புத்தூள்,  சிறுதானிய மாவு சேர்த்துக் கரைத்து 10 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும். எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்துச் சூடாகப் பருகவும். டயட்டில் இருப்பவர்கள் காலை உணவுக்குப் பதிலாக இந்த சூப் பருகலாம். விருப்பப்பட்டால், இதனுடன் பிரவுன் பிரெட் சாண்ட்விச் சேர்த்துக் கொள்ளலாம்.

பயன்:

எடையைக் குறைக்கவும், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் உதவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்