தக்காளி சூப்
2019-02-20@ 16:14:31

என்னென்ன தேவை?
சூப் செய்ய...
எண்ணெய் - 1/2 டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய், கார்ன்ஃப்ளார் - தலா 1 டேபிள்ஸ்பூன்,
பிரிஞ்சி இலை - 1,
மீடியம் சைஸ் வெங்காயம் - 1,
கேரட் - 1/2 துண்டு,
தக்காளி - 12,
செலரி - 2 டீஸ்பூன்,
பூண்டு - 4 பல்,
முழு மிளகு - 6, உப்பு,
மிளகுத்தூள் - தேவைக்கு,
மலாய் - 1/2 கப்,
ரெட் ஃபுட் கலர் - 1 சிட்டிகை.
குரூட்டான்ஸ் செய்ய...
பிரெட் - 2,
வெண்ணெய் - 6-7 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் + வெண்ணெய் சேர்த்து பிரிஞ்சி
இலை, வெங்காயம், செலரி, கேரட், பூண்டு, தக்காளி, உப்பு, முழு மிளகு
சேர்த்து மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும்.
வெந்ததும் இறக்கி ஆறவைத்து பிரிஞ்சி இலையை நீக்கி விட்டு மிக்சியில் நைசாக
அரைத்து வடித்தெடுத்து கொள்ளவும்.
மீண்டும் கடாயில் ஊற்றி தேவையான
அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். சூப் நன்கு கொதித்ததும், (தண்ணியாக
இருந்தால் கார்ன்ஃப்ளாரை கரைத்து ஊற்றி திக் செய்யலாம்.) கடைசியாக திக்
கிரீம் (மலாய்) சேர்த்து கிளறி இறக்கவும். குரூட்டான்ஸ் செய்ய, கடாயில்
வெண்ணெய் சேர்த்து உருகியதும் நறுக்கி வைத்துள்ள பிரெட் துண்டுகளை
பொரித்தெடுக்கவும். சூப்பை குரூட்டான்ஸு டன் பரிமாறவும்.
Tags:
Tomato soupமேலும் செய்திகள்
முருங்கைக்காய் சூப்
தக்காளி சூப்
பீட்ரூட் சூப்
மட்டன் சூப்
ஸ்வீட்கார்ன் வெஜ் சூப்
தக்காளி தேங்காய்ப்பால் சூப்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!