வெள்ளைப் பணியாரம்
2018-12-17@ 14:08:01

என்னென்ன தேவை?
பச்சரிசி - 2 கப்,
உளுந்து, பால் - தலா 1/4 கப்,
சர்க்கரை - 1 டீஸ்பூன்,
உப்பு, பொரிக்க கடலை எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
பச்சரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 1 மணி நேரம் ஊறவைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் பால், சர்க்கரை, சிறிது உப்பு சேர்த்து நன்றாக பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து அரைமணி நேரம் அப்படியே வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து ஊற்றவும். இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுத்து சூடாக காரச்சட்னியுடன் பரிமாறவும்.
குறிப்பு : அரிசி, உளுந்து இரண்டையும் அரைக்கும்பொழுது அரிசி தட்டுப்படாமல் மை போன்று அரைக்க வேண்டும்.
Tags:
வெள்ளைப் பணியாரம்மேலும் செய்திகள்
18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்