SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அவல் மிக்சர்

2018-11-29@ 17:51:33

என்னென்ன தேவை?

கெட்டியான அவல் - 500 கிராம்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
இரண்டாக உடைத்த முந்திரி - 2 டீஸ்பூன்,
காய்ந்த திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது, உப்பு,
எண்ணெய் - தேவைக்கு,
வறுத்த வேர்க்கடலை - 50 கிராம்


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் மிதமான சூட்டில் வைத்து சுத்தம் செய்த அவலை பொரித்தெடுத்து தனியே வைக்கவும். அதே போல் கறிவேப்பிலை, முந்திரி, காய்ந்த திராட்சையை தனித்தனியே எண்ணெயில் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். பொரித்த அவலுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு நன்கு கலந்து, அதனுடன் தோல் நீக்கி வறுத்த வேர்க்கடலையைச் சேர்க்கவும். பொரித்த முந்திரி, காய்ந்த திராட்சை, கறிவேப்பிலை அனைத்தையும் கலந்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்