SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலாக்கொட்டை டிக்கா

2018-08-28@ 16:54:02

என்னென்ன தேவை?

நறுக்கிய பலாக்கொட்டை - 1½ கப்,
உப்பு - தேவைக்கு, கேரட் துருவல் - 1/4 கப்,
சாட் மசாலாத்தூள், ஆம்சூர் பவுடர்,
மஞ்சள் தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்,
சோள மாவு - 3 டேபிள்ஸ்பூன்,
பிரெட் க்ரம்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி, புதினா - தலா 2 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

பலாக்கொட்டையை உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேகவைத்து வெந்ததும் நன்றாக மசித்துக் கொள்ளவும். எண்ணெயை தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் மசித்த பலாக்கொட்டையில் சேர்த்து பிசைந்து சிறு உருண்டை அளவு எடுத்து வடை மாதிரி தட்டி சூடான தவாவில் போட்டு ஓரங்களில் சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்து சாஸுடன் பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

  • ast23

    ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

  • chinacrob23

    சீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்!: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது யுக்தி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்