SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐஸ்கிரீம் சாண்ட்விச்

2018-01-08@ 14:05:10

என்னென்ன தேவை?

வெண்ணெய் - 100 கிராம்
சர்க்கரை - ½ கப் (100 கிராம்)
வெண்ணிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி
முட்டை - 1
மைதா - ½ கப் (60 கிராம்)
கொக்கோ பவுடர் - ½ கப் (50 கிராம்)
உப்பு - ஒரு சிட்டிகை
வெண்ணிலா ஐஸ் கிரீம் - ½ லிட்டர்


எப்படிச் செய்வது?

முதலில் கேக் பேனை அவனில் 180 டிகிரி ப்ரிஹீட் செய்து வைக்கவும். ஒரு கிண்ணத்தில் வெண்ணெய் எடுத்து சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் முட்டை சேர்த்து கலந்து மைதா மாவு, கொக்கோ பவுடர், உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து கெட்டியாக கலக்கி வைக்கவும். பின் அவற்றை ப்ரிஹீட் செய்யப்பட்ட அவனில் நன்கு பரப்பி 10 முதல் 12 நிமிடங்கள் பேக் செய்யவும். கேக்கை பேனில் இருந்து எடுத்து இரு துண்டுகளாக வெட்டி வைக்கவும். இப்போது ஒரு பாதியை பேனில் வைத்து வெண்ணிலா ஐஸ் கிரீமை அதன் மேல் சரிசமமாக பரப்பி பின் மற்றொரு பாதியை அதன் மேல் வைக்கவும். இரவு முழுவதும் ப்ரிஜில் வைத்து எடுக்கவும். பின் சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sabarimalai-3

    பக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்!: புகைப்படங்கள்

  • rainpurevi111

    தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

  • radish3

    புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

  • farmers_proteeee11

    மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

  • 03-12-2020

    03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்