ஸ்ட்ராபெர்ரி மெல்பா ஐஸ்கிரீம்
2017-10-23@ 12:15:08

என்னென்ன தேவை?
ஐஸ்கிரீம் - 2 கப்,
நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி பழம் - 6 அல்லது தேவைக்கு,
ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி பாக்கெட் - 1,
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,
அலங்கரிக்க நறுக்கிய நட்ஸ்,
டிரை ஃப்ரூட்ஸ் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
ஜெல்லி பாக்கெட் அளவின்படி, 1 கப் தண்ணீரில்
ஜெல்லியை கலந்து கொதிக்க வைத்து, தேன் போல் வந்ததும் இறக்கி ஆற விடவும்.
ஒரு அலுமினியம் டிரேயில் கொட்டி ஃப்ரிட்ஜில் ஃப்ரீசரில் வைத்து செட்
செய்யவும். ஒரு கண்ணாடி டம்ளரில் முதலில் ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை போட்டு,
அதன் மேல் 1 கப் ஐஸ்கிரீமை வைத்து, அதன் மேல் நட்ஸ், ட்ரை ஃப்ரூட்சை
தூவவும். ஃப்ரிட்ஜில் செட் ஆன ஜெல்லியை எடுத்து துண்டுகள் செய்து போடவும்.
அதன் மீது மீண்டும் மற்றொரு லேயரை போட்டு டம்ளர் 3/4 பாகம் வந்ததும்
ஐஸ்கிரீமை வைத்து அதன் மேல் ஸ்ட்ராபெர்ரி பழம், நட்ஸ் கொண்டு அலங்கரித்து
குளிரவைத்து உடனே பரிமாறவும்.
மேலும் செய்திகள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!