SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாட்டுக்காய்கறிகள் தேங்காய் கலவை வறுவல்

2017-06-21@ 14:02:26

என்னென்ன தேவை?

சிறு துண்டுகளாக நறுக்கிய காய்கறிகள் பீர்க்கங்காய் - 200 கிராம்,
சுரைக்காய் - 100 கிராம்,
புடலங்காய் - 100 கிராம்,
கோவைக்காய் - 50 கிராம்,
முருங்கைக்காய் - 2,
வெறும் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
நறுக்கிய பெங்களூர் தக்காளி - 2,
பெரிய வெங்காயம் - 1,
சீரகம் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
தேங்காய்த்துருவல் - 100 கிராம்.


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, மஞ்சள் தூள், சீரகத்தை போட்டு வதக்கவும். பின் தக்காளியை சேர்த்து வதக்கி, நறுக்கிய காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு, மிளகாய்த்தூளை சேர்த்து வதக்கி இறக்கவும். இக்கலவையை குக்கருக்கு மாற்றி, காய்களை வேகவிட்டு தேங்காய்த்துருவலை சேர்த்து நன்கு கிளறி வறுத்து இறக்கவும். காலிஃப்ளவர் சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்பு: பீன்ஸ், அவரைக்காய், கொத்தவரங்காய், வேர்க்கடலை, உருளைக்கிழங்கு மற்றும் பூமிக்குக் கீழ் விளையும் எந்த கிழங்கையும் பேலியோவில் சேர்க்கக்கூடாது. ஆனால் சேனைக்கிழங்கை மட்டும் பேலியோவில் சேர்க்கலாம். வெண்டைக்காய், வாழைத்தண்டு, சுண்டைக்காய், பாகற்காய், காலிஃப்ளவர், பிரக்கோலி, பூசணி, முட்டைக்கோஸ், ஆஸ்பாரகஸ், வெள்ளரிக்காய், குடைமிளகாய், காளான், தேங்காய், அனைத்து கீரை வகைகள், பெரிய நெல்லிக்காய், அவகடோ, எலுமிச்சைப்பழம், ஆடையுடன் கூடிய பால், சீஸ், கொழுப்பு நிறைந்த தயிர், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலையை சைவ பேலியோ டயட்டில் சேர்க்கலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • humanbodies23

    2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

  • jammu23

    ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

  • yamuna23

    இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

  • chadpuja23

    சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

  • isrelviva23

    இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்