SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆட்டையாம்பட்டி முறுக்கு அமெரிக்காவில் கமகமக்குது

2017-04-03@ 12:42:00

முறுக்கு என்றவுடன் பலருக்கும் மணப்பாறை மட்டும் தான் நினைவுக்கு வரும். ஆனால், மணப்பாறை முறுக்கை காட்டிலும் ஆட்டையாம்பட்டி முறுக்குக்கு வாசனை அதிகம். சேலத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் திருச்செங்கோடு செல்லும் வழியில் உள்ள ஆட்டையாம்பட்டிக்குள் நுழையும் போதே வீட்டுக்கு வீடு முறுக்கு சுடும் வாசனை மூக்கை துளைக்கும்.

கை முறுக்கு எப்படி தயாராகுது: ‘‘கை முறுக்கு சுற்ற பிசுக்குள்ள அரிசியாக இருந்தால் நல்லது. அரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கிறோம். ஊறிய பிறகு வெள்ளைத் துணியில் முடிந்து வைத்து தண்ணீரை சுத்தமா வடிச்சிருவோம். பின்னர் கிரைண்டர்ல அரைச்சிடுவோம். உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து, அரைத்து சலித்து வைத்துக் கொள்வோம். பின்னர் பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, எள், பெருங்காயத்தூள், உப்பு, வெண்ணெய் சேர்த்து பிசைகிறோம். மாவு பதம் நன்றாக இருந்தால்தான் நன்றாக முறுக்கு சுற்ற முடியும். வெள்ளைத் துணி மேல் ஒரு பாட்டில் மூடியை வைத்து, அதைச் சுற்றி மாவை விரல்களில் இருந்து விடுவித்து சுத்தி விடுவோம். முறுக்கு வடிவம் கிடைச்சதும் எண்ணெய் காயும் வாணலியில் போட்டு எடுப்போம்.

முதலில் சடசடவென சத்தம் வரும். ஒரு பக்கம் வெந்ததும், முறுக்குகளைத் திருப்பிப் போடுகிறோம். தேங்காய் எண்ணெயில் செய்வதால் முறுக்கு மிருதுவாகவும், மணமாகவும் இருக்கும். செய்முறை ஏறக்குறைய ஒன்று தான். ஆனால் அனுபவஸ்தர்களின் கை பக்குவமே எங்கள் பகுதி கைமுறுக்கின் ருசியை கூட்டுகிறது. இந்த கைமுறுக்குக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. பாதுகாப்பாக  வைத்திருந்தால் ஒரு மாதம் வரை கெடுவது இல்லை. மேலும் சுட்டவுடன் சாப்பிட்டால் ஒரு சுவையும், அடுத்த நாள் சாப்பிட்டால் வேறுவிதமான சுவையும், ஒரு வாரம் கழித்து சாப்பிட்டால் மற்றொரு சுவையும் கிடைக்கிறது.

எல்லா சுவையும் வாயுக்கு மட்டுமல்ல மனசுக்கும் தான். எங்க ஊர்ல மட்டுமே இந்த முறுக்கை விற்கறதில்லைங்க. இங்கிருந்து அமெரிக்காவுக்கு கூட கொண்டு போறாங்க எனக்கூறி வாயை பிளக்க வைத்தார் பெரியசாமி. முறுக்கு சுடுவதில் இவருக்கு 20 ஆண்டுக்கு மேல் அனுபவம். ஆட்டையாம்பட்டி மட்டுமின்றி சுற்றியுள்ள சேலம், திருச்செங்கோடு, நாமக்கல் பகுதிகளை சேர்ந்த பலர் அமெரிக்கா உள்பட பல நாடுகளில் வாழ்கின்றனர். உள்ளூருக்கு வந்து விட்டு திரும்பி செல்லும் போது பாட்டில்களில் அடைத்து வாங்கி செல்கின்றனர். ஆட்டையாம்பட்டி முறுக்கு ருசி கேள்விப்பட்டு தற்போது திருச்செங்கோடு, நாமக்கல், சேலம் வரும் வெளியூர் வாசிகள் பலரும் ஆட்டையாம்பட்டிக்கு ரூட் பிடித்து வந்து வாங்கி செல்வது சிறப்பு.

buy naltrexone williamgonzalez.me ldn naltrexone
low dose naltrexone side effects autism naltrexone side effects low dose dr bihari ldn


naltrexone injections myjustliving.com stopping ldn

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்