தேங்காய் பழ பஞ்சாமிர்தம்
2015-10-19@ 16:57:05

பழனி பஞ்சாமிர்தம் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். பெருமாள் கோயில்களில் தேங்காய் பழ பஞ்சாமிர்தத்தால் பெருமாளுக்கு அபிஷேகம் செய்வார்கள். பிரசாதமாக உண்ணும்போது அதன் சுவையே அலாதிதான்! விசேஷங்களின் போது வீட்டில் நிறைய பழங்கள் மீந்துவிட்டால், ஊட்டச்சத்து மிகுந்த இந்த பஞ்சாமிர்தத்தை செய்து பாருங்களேன்!
என்னென்ன தேவை?
ஆப்பிள் 2,
ஆரஞ்சு 2,
சாத்துக்குடி 2,
மாம்பழம் 2,
மாதுளை 1,
விதையில்லாத பேரீச்சை 100 கிராம்,
பச்சை திராட்சை 100 கிராம்,
பன்னீர் (கருப்பு) திராட்சை 100 கிராம்,
மலை வாழைப்பழம் அல்லது ரஸ்தாளி 3 அல்லது 4,
கட்டிக் கற்கண்டு 100 கிராம்,
தேன் 50 கிராம்,
நெய் 1 டேபிள்ஸ்பூன்,
சிறிய தேங்காய் 1 (துருவியது).
எப்படிச் செய்வது?
பழங்களை நன்கு கழுவவும். ஆரஞ்சு, சாத்துக்குடியைத் தோலுரித்து, விதை நீக்கி, சுளைகளை எடுத்துக் கொள்ளவும். மற்ற பழங்களை நறுக்கிக் கொள்ளவும். கற்கண்டை பொடித்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். எல்லா பழங்களையும் கலந்து, தேன், கற்கண்டு, துருவிய தேங்காய், நெய் சேர்த்து கலக்கவும். நைவேத்தியத்திற்கு தேங்காய் பழ பஞ்சாமிர்தம் தயார்.
குறிப்பு: நைவேத்தியத்திற்கு மேலே குறிப்பிட்ட பழங்களும், கற்கண்டு அல்லது வெல்லத்தூள் மட்டுமே சேர்க்கப் படுகின்றது. மற்றபடி வேறு பழங்களும் சர்க்கரையும் சேர்க்கலாம்.
Tags:
Pancamirtam Palani heard about. Perumal Perumal temples anointed by the coconut fruit pancamirtatமேலும் செய்திகள்
எலுமிச்சை இனிப்பு ஊறுகாய்
பேரீச்சம்பழ பாசிப்பருப்பு பணியாரம்
அவல் பாயசம்
பலாப்பழம் புட்டிங்
அன்னாசிப்பழ அவல் புட்டு
கேரட் அவல் அல்வா
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!