ரவா கேசரி
2015-01-06@ 14:00:16

என்னென்ன தேவை?
ரவை - 1 கப்
தண்ணீர் - 2 1/2 கப்
சர்க்கரை - 1 3/4 கப்
நெய் - 3/4 கப்
கேசரி கலர்- சிறிதளவு
ஏலப்பொடி - சிறிதளவு
முந்திரிப் பருப்பு - ஒரு கைப்பிடி
கிஸ்மிஸ் -1 தேக்கரண்டி
எப்படிச் செய்வது?
அடுப்பில் வாணலியில் 2 தேக்கரண்டி நெய் விட்டு கிஸ்மிஸ், முந்திரியை நன்கு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். மீண்டும் 2 தேக்கரண்டிநெய் விட்டு ரவை வாசனை போகும் வரை சிவக்க வறுக்கவும். இரண்டரை கப் தண்னீரைச் சேர்த்து அடுப்பை நிதானமாக வைத்து நன்கு வேகவைக்கவும். ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை, கேசரி கலரைச் சேர்த்துக் கிளறவும்.
சர்க்கரையால் கலவை மீண்டும் தளரும். ஒட்டாமல் சேர்ந்து வரும்வரை இடையில் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கொண்டே கிளறவும். கேசரியை இறக்கும் முன் மிச்சமுள்ள நெய், ஏலப்பொடி தூவி இறக்கவும். வறுத்து வைத்திருக்கும் கிஸ்மிஸ், முந்திரியைக் கலந்து கொள்ளவும். கேசரியை ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, மேலே மீதி கிஸ்மிஸ் முந்திரி தூவி, வில்லைகள் போடலாம்.
மேலும் செய்திகள்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!