கோதுமை ரவை புட்டு
2012-12-26@ 14:47:18

என்னென்ன தேவை?
கோதுமை ரவை - 1 கிலோ,
தேங்காய்த் துருவல் - 100 கிராம்,
சர்க்கரை - 50 கிராம்,
ஏலக்காய் தூள் - சிறிது.
எப்படிச் செய்வது?
கோதுமை ரவையை வெறும் கடாயில் வறுத்து, மிக்சியில் ஒரு சுற்று அரைத்து டப்பாவில் போட்டு வைக்கவும். தேவைப்படும் போது, இதில் சிறிது எடுத்து தண்ணீர் தெளித்துக் கைகளால் பிசறி விட்டு, 5 நிமிடங்களுக்கு ஆவியில் வேக வைத்து எடுக்கவும். பிறகு ஒரு தட்டில் கொட்டி, உதிர்த்து விட்டு, தேங்காய்த் துருவல், சர்க்கரை, ஏலக்காய் தூள் கலந்து பரிமாறவும். இனிப்புச் சுவை பிடிக்காதவர்கள், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து, உப்பு சேர்த்து சாப்பிடலாம். இதே முறையில் கம்பு, சோளம், கேழ்வரகிலும் செய்யலாம்.
Tags:
Frying And semolina Wheat in a pan mixer-grinder and grind to a round place in the bottles When needed which spray water on the hands of some of the picari take 5 minutes to cook in spirit Then poured on to a plate leaving the shed coconut milling sugar cardamom powder and serve with Disliked the taste of sweet mustard cumin lentil Curry Tree onion green chillies talittu salt and eat At the same time rye sorghum can use also Ragiமேலும் செய்திகள்
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!