SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம்

2015-02-09@ 10:53:02

திரளான பக்தர்கள் தரிசனம்

திருமானூர் : திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த திருமழபாடியில் பிரசித்தி பெற்ற சுந்தராம்பிகை உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. புறாவுக் காக உடலை கொடுத்த சிபி சக்ரவர்த்திக்கு நவக்கிரகங்களினால் உண்டான தோஷங்களை நீக்கிய தலம் இது என புராணம் கூறுகிறது. இக்கோயில் கும்பாபி ஷேக விழாவையொட்டி கடந்த 5ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் யாக சாலை பூஜைகள் நடந் தன. நேற்று காலை 5 மணி க்கு யாகசாலை பூஜைகள் துவங்கி பரிவார பூர்ணா ஹூதி நடந்தது. தொடர்ந்து யாக சாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை சுற்றி வந்து ராஜகோபுர கலசங்கள், வைத்தியநாத சுவாமி, அம்பாள் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருவை யாறு பஞ்சநதீஸ்வரர் தேவஸ்தான கட்டளை குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், திருமழபாடி சிவானந்த சுவாமிகள், எம்எல்ஏ துரை.மணிவேல், சப். கலெக்டர் சந்திரசேகர சகாமூரி, தாசில்தார்கள் வைத்தியநாதன், தண்டாயுதபாணி மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிச னம் செய்தனர். மாலை 4 மணிக்கு மஹா அபிஷேகம், 6 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்காக அரியலூர், திருமானூர், தஞ்சை, லால்குடி உள்ளிட்ட பல இடங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. டிஎஸ்பி கணேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்