குழந்தைப்பேறு அளிக்கும் விரத வழிபாடுகள்
2015-02-03@ 12:01:02

கண்கண்ட தெய்வம் முருகன் என்றும், கஷ்ட வினைகளை துரத்தியடிக்கும் வல்லமை முருகனுக்கு உண்டு என்று பக்தர்கள் நம்புகின்றனர். இதற்காக பல்வேறு காணிக்கைகளை பக்தர்கள் செலுத்துகின் றனர். முருக பக்தர்கள் உயி ரினக் காணிக்கையாகப் பசு, சேவல், மயில் போன்றவற்றைச் செலுத்துகின்றனர். வேண்டுதல் காணிக் கையாக முடிக்காணிக்கை, தானியங்கள், துலாபாரக் காணிக்கையும் செலுத்தப்படுகிறது. நெல், கம்பு, சோளம், மிளகாய், பருப்பு, உளுந்து, திணை, மஞ்சள், மக்காச்சோளம் இவற்றை மிகுதியாகப் பக்தர்கள் தைப்பூச நாளில் முருகனுக்கு காணிக்கையாக அளிக்கின்றனர். நம்பிக்கைக் காணிக்கையாக குழந்தைகளுக்கு காது குத்துதல், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், அன்னதானம் செய்தல், உருவாரக் காணிக்கை அளித்தல், தாலிக் காணிக்கை அளித்தல் முதலியனவற்றைச் செலுத்துகின்றனர்.
தைப்பூச நாளில் தங்க, வெள்ளி ஆபரணங்களைப் பக்தர்கள் உண்டியலில் செலுத்தி வழிபட்டுச் செல்கின்றனர். உண்டியலில் காசு, பணம், காசோலை, கைக்கடிகாரம், மோதிரம், வளையல் போன்ற பொருட்களையும் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தி வழிபட்டுச் செல்கின்றனர். காணிக்கைகள் அளிப்பதால் முந்தைய கர்ம வினைகள் அழியும். வழக்கமான வாழ்வில் ஏற்படும் சண்டை சச்சரவுகள் விலகி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செல்வ வளம் பெருகும்.
குழந்தைப் பேறு இல்லாத தம்பதியர் பழநி முருகனுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்கின்றனர். ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நாளில் பழநி முருகனைக் கண்டு வழிபட்டுச் செல்கின்றனர். ஆண்களும், பெண்களும் அமாவாசை, பவுர்ணமி தினங்களில் விரதம் இருந்து வழிபாடு செய்கின்றனர். சித்திரை மாதம் நடைபெறும் அக்னி நட்சத்திர விழாவில் பழநி மலையைச் சுற்றிக் கிரிவலம் வருகின்றனர். குழந்தை வரம் வேண்டி சிலர் பழநி மலைக்கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்கின்றனர். பல்வேறு விரதங்களின் அடிப்படையில்தான் குழந்தைப்பேறு கிடைத்தது என்றும் நம்புகின்றனர்.
மேலும் செய்திகள்
தைப்பூசமும் தமிழ் கடவுளும்!
தைப்பூசத்தன்று (8-2-2020)
வல்வினைகள் போக்கும் வயலூர் முருகன்
கரும்புடன் கந்தன்
அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா
ஔவைக்கு அருளிய அழகன்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...